இனி யூத்தமில்லாதா உலகம் கேட்டேன்.
இனியோர் சொல்லை ஏற்றிடல் கேட்டேன்.
இனிமையாய் பொழுது விடியல் கேட்டேன்.
இனிதாய் ஈந்து மகிழ்ந்திட கேட்டேன்.
இனியெங்கும் சுபிட்சம் அடைய கேட்டேன்.
இனிக்கின்ற இல்லற வாழ்வு கேட்டேன்.
இனிய நண்பர்கள் அமைய கேட்டேன்.
பனியிடத்தில் நல் உலைப்பு கேட்டேன்.
பனிந்து பெற்றோரை பேணிட கேட்டேன்.
பனிக்காற்றில்லா தென்றல் கேட்டேன்.
பினியில்லா நல் ஆறோக்கியம் கேட்டேன்.
புனித்தால் நேர் வழி பெற கேட்டேன்.
மனிதர்க்கு இறை பயம் கேட்டேன்.
மனித நேயம் மலர கேட்டேன்
கனித விஞ்ஞானம் கற்றுத் தெளிய கேட்டேன்.
கனிமங்கள் நிறைந்திருக்க கேட்டேன்.
கனிகள் செடி கொடிகள் மாறா பசுமை கேட்டேன்.
தமிழ் மொழி செம்மொழி எங்கும் பேச கேட்டேன்.
சினிமா சீர் கெடுத்திறாதிருக்க கேட்டேன்.
தனி என்ற தீண்டாமை ஒழிய கேட்டேன்.
துணிந்தே நல்லதை சாதிக்க கேட்டேன்.
அனீதமில்லா நல்லாட்சி கேட்டேன்
வணிகத்தில் உண்மை பேச கேட்டேன்.
வினியோக பொருள் கலப்பின்றி கேட்டேன்.
மானிடர் யாவரும் நேர் வழி பெற கேட்டேன்.
இறைவன் ஒருவன் என்றிட கேட்டேன்.
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை !
காரணம் எதுவும் புரியவில்லை !
இவ்வுலஹில் சஹித்து கொண்டு வாழ
தெய்ரியமுள்ள உள்ளம் கேட்டேன் !