நான் மட்டும் தனியாக...
பட்டம் வாங்காமல் சுற்றித் திரிந்தேன் இறக்கைக்கட்டி!
அப்பட்டம் வாங்கிய இரண்டொரு நாட்களில்...
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் பாட்டிக்கு
செல்லமாக!
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
இவ்வாழ்கையின் அனுபவமுள்ள
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
வம்புச் செய்யும்
தங்கையோ
தேம்பி அழுதாழ்!
அன்புதரும் கனவு
காதலியோ முத்தமிட்டாள்
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது!
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக கண்ணீர்
என்னைக் கடந்தது!
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ கட்டித்தழுவி
சென்றார்கள்!
வேலை இல்லை
வாழ்கையின் பாதை
தெரியவில்லை!
இறைவனின் கட்டளை
நான் வந்தடைந்தேன்
இத்தீவில்!
இறைநம்பிக்கை இருந்தது
தன்னம்பிக்கை
கைகுடுத்தது!
அதிகம் பேசாத மச்சான்
அன்புகாட்டும் அக்கா
இவர்களின் அரவணைப்பில்
வேலை தேடி!
கிடைத்தது வேலை
பிறந்தது வழி
பறந்தேன்!
இப்போதுநான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக ஆழ்கடலில்
செரிமாணமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
-- hameedsice
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
-- hameedsice