my favourite !

We are the world !

We are the children !

We are the youths of the 21st Century !!!

Tuesday, May 24, 2011

நான் மட்டும் தனியாக...

நான் மட்டும் தனியாக...
 
பட்டம் வாங்காமல் சுற்றித் திரிந்தேன் இறக்கைக்கட்டி!
அப்பட்டம் வாங்கிய இரண்டொரு நாட்களில்... 
 
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் பாட்டிக்கு
செல்லமாக!
 
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
 
இவ்வாழ்கையின் அனுபவமுள்ள  
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
 
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
 
வம்புச் செய்யும்
தங்கையோ
தேம்பி அழுதாழ்!

அன்புதரும்  கனவு   
காதலியோ முத்தமிட்டாள்  
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
 
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது!
 
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக கண்ணீர்
என்னைக் கடந்தது!
 
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ கட்டித்தழுவி
சென்றார்கள்!
 
வேலை இல்லை
வாழ்கையின் பாதை 
தெரியவில்லை!
 
இறைவனின் கட்டளை
நான் வந்தடைந்தேன் 
இத்தீவில்!
 
இறைநம்பிக்கை இருந்தது 
தன்னம்பிக்கை
கைகுடுத்தது!
 
அதிகம் பேசாத மச்சான்
அன்புகாட்டும் அக்கா
இவர்களின் அரவணைப்பில் 
வேலை தேடி!
 
கிடைத்தது வேலை
பிறந்தது வழி
பறந்தேன்!
 
இப்போதுநான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
 
வருமானத்திற்காக ஆழ்கடலில்  
செரிமாணமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!

-- hameedsice

Sunday, March 20, 2011

என் பிரார்த்தனை !

இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக!
நீ நாடினால்
என் நிலையை உயர்த்து!
ஒரு போதும்
என் நினைப்பை உயர்த்தி விடாதே!

-- hameedsice

என் மாறுபட்ட கேள்விகள் !

 
இனி யூத்தமில்லாதா  உலகம் கேட்டேன்.
இனியோர் சொல்லை ஏற்றிடல் கேட்டேன்.
இனிமையாய் பொழுது விடியல் கேட்டேன்.
இனிதாய் ஈந்து மகிழ்ந்திட கேட்டேன்.
இனியெங்கும் சுபிட்சம் அடைய கேட்டேன்.
இனிக்கின்ற இல்லற வாழ்வு கேட்டேன்.
இனிய நண்பர்கள் அமைய கேட்டேன்.
பனியிடத்தில் நல் உலைப்பு கேட்டேன்.
பனிந்து பெற்றோரை பேணிட கேட்டேன்.
பனிக்காற்றில்லா தென்றல் கேட்டேன்.
பினியில்லா நல் ஆறோக்கியம் கேட்டேன்.
புனித்தால் நேர் வழி பெற கேட்டேன்.
மனிதர்க்கு இறை பயம் கேட்டேன்.
மனித நேயம் மலர கேட்டேன்
கனித விஞ்ஞானம் கற்றுத் தெளிய கேட்டேன்.
கனிமங்கள் நிறைந்திருக்க கேட்டேன்.
கனிகள் செடி கொடிகள் மாறா பசுமை கேட்டேன்.
தமிழ் மொழி செம்மொழி எங்கும் பேச கேட்டேன்.
சினிமா சீர் கெடுத்திறாதிருக்க கேட்டேன்.
தனி என்ற தீண்டாமை ஒழிய கேட்டேன்.
துணிந்தே நல்லதை சாதிக்க கேட்டேன்.
அனீதமில்லா நல்லாட்சி கேட்டேன்
வணிகத்தில் உண்மை பேச கேட்டேன்.
வினியோக பொருள் கலப்பின்றி கேட்டேன்.
மானிடர் யாவரும் நேர் வழி பெற கேட்டேன்.
இறைவன் ஒருவன் என்றிட கேட்டேன்.
 
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை !
காரணம் எதுவும் புரியவில்லை !
 
இவ்வுலஹில் சஹித்து கொண்டு வாழ
தெய்ரியமுள்ள  உள்ளம் கேட்டேன் ! 
 
-- ஹமீட்ஸ்ஐஸ்

என் மாறுபட்ட எண்ணங்கள் !

புத்தம் புது பூமி வேண்டாம்
சுத்தமான பூமி வேண்டும் !
நித்தம் ஒரு வாணம் வேண்டாம்
ஒசோனில் ஓட்டை இல்லாத  வாணம் வேண்டும்  !
தங்க மழை போய்ய வேண்டாம்
தமிழஹத்திலாவது மழை பெய வேண்டும் !
தமிழில் குயில் பாடவே  வேண்டாம்
மனிதர்ஹலாவது பேசட்டும் !
 
-- ஹமீட்ஸ்ஐஸ்

Tuesday, January 18, 2011

தொழுகை !!!

“ஐநேரத் தொழுகை
அனுதினமும்
கடமை” என்றேன்-நீ
ஆகாரம் தேடுவதிலேயே
ஆர்வமாய் இருந்தாய்.

“உனக்குத் தொழுகை
நடத்துமுன்-நீ
தொழுதுகொள்” என்றேன்.
தொழில்செய்யவே
தொடர்ந்து நீ முயன்றாய்.

“மரணம் வரும்வரை
மட்டில்லா ஆசைகள்-உன்
இறைவன் நினைவைவிட்டு
அகற்றிவிட வேண்டா” என்றேன்.
காதில் வாங்காமல்
கவனமற்று இருந்தாய்!

“ஆறிலும்
அழிவு வரலாம்.
நூறிலும்
அழிவு வரலாம்.
ஆகவே அல்லாஹ்வை
ஆர்வமாய்த்தொழுதுகொள்!”
என்றேன்.

நீயோ
வீண்பேச்சு, கேளிக்கை
அரட்டையில் நாள்தோறும்-உன்
நாட்களைக் கழித்தாய்!

தொழு! தொழு! என்று
தொடர்ந்து நான்
சொன்னபோதும்
தொழாத நீயோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து இரசிப்பதிலே
காலத்தைத் தொலைத்தாய்!

 இதோ-உன்
உயிரைப் பறிக்கின்ற
வானவர் வந்துவிட்டாரே
இப்போது நீ
என்ன செய்யப்போகிறாய்?

-- hameedsice

Thursday, January 13, 2011

முன்னாள் சிநேகிதிகள்

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய கைபேசி எண்களும்
என்னிடம் இல்லை.

மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.

என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.

திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!

-- hameedsice

வாழ்த்துகள்

தலைத்த தைமகளுக்கு...
துளிர்த்த தமிழனின்
வியர்வைத் துளிகள் - வாழ்த்துகள்....!

-- hameedsice